தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளி தேயிலை தோட்டம் பணிக்கு சென்றார். அப்போது அந்தப் பகுதியில் யானை ஒன்று நின்றது. யானை நிற்பதாக பலரும் கூச்சலிடவே இளைஞர் உஷாரானார். ஆனால் மக்களின் கூச்சலை கேட்ட யானை அந்த இளைஞரை விரட்டத் தொடங்கியது. இதனால் பயந்துபோன அந்த இளைஞர் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடத் தொடங்கினார். இளைஞர் ஓடுவதை கண்டு யானையும் படு வேகமாக சென்று அவரை விரட்டியது. இளைஞர் வெகுதூரம் சென்ற பின்னரே யானை திரும்பிச் சென்றது