தமிழ்நாடு

கோவையை கலக்கும் புதிய வைஃபை மரங்கள்

கோவையை கலக்கும் புதிய வைஃபை மரங்கள்

webteam

கோவை  மாநகரப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் வைஃபை வசதியை ஏற்படுத்துவதற்காக செயற்கை மரத்தில் வைஃபை கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது. 

கோவை மாநகரப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பந்தயசாலை, மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக கோவை மாநகரப் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் வஉசி பூங்காவில் வைஃபை வசதியை ஏற்படுத்தி வருகின்றனர்.

பூங்காவில் இதற்காக பிரத்யேகமாக வடிவைக்கபட்ட செயற்கை மரத்தில் இந்த வைஃபை கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இப்பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவு வரை இணைய வசதியை பெற முடியும். விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த வசதி வரவுள்ளது.  இது மட்டுமல்லாது உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் இந்த வைஃபை வசதி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.