தமிழ்நாடு

தாய் வீட்டிற்குச் சென்ற மனைவி திரும்ப வராத ஆத்திரத்தில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய கணவர்

தாய் வீட்டிற்குச் சென்ற மனைவி திரும்ப வராத ஆத்திரத்தில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய கணவர்

kaleelrahman

அம்மா வீட்டிற்குச் சென்ற மனைவியை, அழைத்தபோது வராததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்தினார்.

சென்னை மேடவாக்கம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (29), தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கும் சங்கீதா (25) என்பவருடன் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது இருவரும் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒருமாத காலமாக கணவன் மீது சந்தேகப்பட்டு மனைவி பெரும்பாக்கம் வனத்துறை குடியிருப்பில் இருக்கும் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதையடுத்து நள்ளிரவில் தனது மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டிற்கு சத்தியசீலன் சென்றுள்ளார். அப்போது சங்கீதா கணவருடன் வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்தியசீலன் தனது மனைவியின் இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்தினார். இதில், இருசக்கர வாகனம் எரிந்து எலும்புக்கூடானது. இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீசார், சத்தியசீலனை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர்.