தமிழ்நாடு

திருமணமான இரண்டே ஆண்டில் மனைவி தற்கொலை - கணவரிடம் விசாரணை...!

திருமணமான இரண்டே ஆண்டில் மனைவி தற்கொலை - கணவரிடம் விசாரணை...!

webteam

குடும்ப பிரச்னை காரணமாக திருமணமான இரண்டே ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேவி பட்டியைச் சேர்ந்த சீனிவாசனுக்கும், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ராமு என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சீனிவாசன் திருமயம் அருகே உள்ள மெய்ய புரத்தில் குடும்பத்துடன் தங்கி ஜேசிபி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனிவாசன் வெளியே சென்ற நேரம், ராமு வீட்டில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் திருமயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராமுவின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.