வழக்கமான பராமரிப்பு பணிகளுக்குதான் கழிவறைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனிடையே மருத்துவமனையின் பல கழிப்பிடங்கள் மூடப்பட்டு கிடப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. தண்ணீர் பற்றாக்குறையால் தான் கழிப்பிடங்கள் மூடப்பட்டதாகவும் தகவல் பரவின.
இந்நிலையில் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்குதான் கழிவறைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவனை தெரிவித்துள்ளது. அதேசமயம் மருத்துமனையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள நிர்வாகம், 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க வசதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.