udayanithi
udayanithi pt desk
தமிழ்நாடு

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் உதயநிதி விளக்கம்

webteam

சென்னை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் அருகே ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார், இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன், சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

sports

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது... ரூ1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.. அண்ணா சதுக்கத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தீவிர விசாரணை செய்த பின்தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

sports

கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்துள்ளது காணொலி மூலமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் . அதன் பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம்" என்றார்.