தமிழ்நாடு

சசிகலா முதலமைச்சராக வலியுறுத்தியது ஏன்?....தம்பிதுரை விளக்கம்

சசிகலா முதலமைச்சராக வலியுறுத்தியது ஏன்?....தம்பிதுரை விளக்கம்

webteam

உத்தரப்பிரதேசத்தில் நிலவுவது போன்ற குழப்பமான சூழல் தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சசிகலா முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்ததாக அதிமுக கொள்கை ‌பரப்புச் செயலாளர் தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, கடந்த 31-ம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் ‘கட்சி தலைமை ஒருவரிடமும், ஆட்சி தலைமை ஒருவரிடம் இருப்பது ஏற்புடையதல்ல. அதிமுகவினர் மனநிலையை ஏற்று சசிகலா முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, உத்தரப்பிரதேசத்தில் கட்சி மற்றும் ஆட்சி ஆகியவை வெவ்வேறு நபர்களிடம் இருப்பதாலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவேதான் சசிகலா முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறிய அவர், திமுக தலைவர் கருணாநிதி கட்சித் தலைமையோடு ஆட்சிப்பொறுப்பு வகித்ததையும் சுட்டிக் காட்டினார்.