தமிழ்நாடு

“யாரையோ திருப்திப்படுத்தவே என் மீது கைது நடவடிக்கை” - ஆர்.எஸ். பாரதி

webteam

யாரையோ திருப்திப்படுத்தவே தன் மீது கைது நடவடிக்கை என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

2020 பிப்ரவரி 15-ல் அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்த பேச்சு, பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி  சர்ச்சையானது. இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், 3 மாதங்களுக்கு பிறகு தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “ பிப்.15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ஓபிஎஸ் செய்த ஊழலை பற்றி புகாரளித்தேன். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”எனத் தெரிவித்தார்.