ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் தொடர்பாக, பிஎஸ்பிபி பள்ளியின் முதல்வரிடம் 2ஆவது முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி (பிஎஸ்பிபி) ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அதனால், பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டதால், தாளாளர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோர் நேற்று நேரில் ஆஜராகினர். அவர்களிடம் 3 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முதல்வர் கீதா கோவிந்தராஜன் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கீதா கோவிந்தராஜன் 2ஆவது முறையாக ஆஜரானர். புகார் கிடைத்ததும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.