தமிழ்நாடு

மறைமுகத் தேர்தல் எப்படி நடைபெறும்..? ஏன் சுயேச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம்..?

மறைமுகத் தேர்தல் எப்படி நடைபெறும்..? ஏன் சுயேச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம்..?

Rasus

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 11-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், சுயேச்சைகளை தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. அதற்கு என்ன காரணம், மறைமுகத் தேர்தலில் சுயேச்சைகளின் பங்கு என்ன..?

மறைமுகத் தேர்தல் நடைபெறும் பதவிகள்

1.மாவட்ட ஊராட்சித் தலைவர்

2.மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர்

3. ஊராட்சி ஒன்றியத் தலைவர்

4.ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர்

5.கிராம ஊராட்சித் துணைத் தலைவர்

எப்படி தேர்வு செய்யப்படுவர்?

மாவட்ட கவுன்சிலர்கள் வாக்களித்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள்.

வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் கிராம ஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

மறைமுகத் தேர்தல் தேர்தல் நடைமுறைகள்

தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

கட்சிகள் சார்பில் வென்றவர்கள், கட்சி முன்னிறுத்தும் நபருக்கே வாக்களிக்க வேண்டும்

கட்சி விதிகளை மீறினால் கட்சித் தாவல் தடை சட்டம் உறுப்பினர்கள் மீது பாயும்.

உறுப்பினர்கள் ரகசியமாகவே தங்கள் வாக்குகளை பதிவு செய்வர்.

குலுக்கல் முறை

ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு ‌நடைபெறும்.

சுயேச்சைகளின் முக்கியத்துவம்

கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் சுயேச்சைகளே வெற்றியை நிர்ணயிப்பர்.

*பெரும்பான்மையை விட கூடுதல் பலம் பெறவும் சுயேச்சைகளின் ஆதரவு தேவை என்பதால், இருபெரும் கட்சிகளும் சுயேச்சைகளை தங்கம் பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.