தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்து தர்ம யுத்தம் ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்து தர்ம யுத்தம் ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

Rasus

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் தாம் பேசியதாகவும், இதனைத் தொடர்ந்தே, தர்ம யுத்தத்தை மேற்கொள்வதாக கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட தனது ஆதரவு அதிமுக நிர்வாகிகளை சந்தித்து உரையாடியானர். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்வரை தர்ம யுத்தம் தொடரும் என தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் தாம் பேசியதாகவும், இதனைத் தொடர்ந்தே, தர்ம யுத்தத்தை மேற்கொள்வதாக கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், இதன் முதற்படியே உண்ணாவிரதம் போராட்டம் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி வரும் 8-ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.