தமிழ்நாடு

ஆன்லைன் மணல் விற்பனையில் தாமதம் ஏன்?முதல்வர் விளக்கம்

ஆன்லைன் மணல் விற்பனையில் தாமதம் ஏன்?முதல்வர் விளக்கம்

webteam

மணல் விற்பனையில் மேலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 


சட்டபேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர் ராமசாமி தமிழகத்தில் மணல் தட்டுபாடு உள்ளதாகவும் உரிய நேரத்தில் மணல் கிடைப்பது இல்லை என்றும் கூறினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவே அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தும். இந்த சீர்திருத்தங்கள் மூலம் மணல் திருட்டு முழுமையாக தடுக்கப்படும். குவாரிகளில் இருந்து மணலை கொண்டு வர பாதைகள் அமைக்க வேண்டி உள்ளதால்தான் மணல் வினியோகம் தாமதமாகி வருகிறது. மணல் விற்பனையை முறைப்படுத்தவே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வெளிப்படையாக மணல் விற்பனை நடைபெறுவதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இல்லை என அவர் கூறினார்.