தமிழ்நாடு

15 நாட்கள் அவகாசம் ஏன்? ஸ்டாலின் கேள்வி

15 நாட்கள் அவகாசம் ஏன்? ஸ்டாலின் கேள்வி

Rasus

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்தது ஏன் என்று தெரியவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் அளித்த பேட்டியில், ஆளுநர் காலதாமதமாக ஆட்சியமைக்க அழைத்திருந்தாலும் அதனை தி.மு.க. வரவேற்பதாக கூறினார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தது ஏன்? என தெரியவில்லை எனக் கூறிய ஸ்டாலின் 15 நாட்கள் அவகாசம் அளித்திருப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றார்.