Annamalai pt
தமிழ்நாடு

சபாநாயகரா, ஆளுநரா? – அவரே கன்பியூஸ் ஆயிட்டார்! வைரலாகும் அண்ணாமலையின் பேட்டி!

நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து பேசிய அண்ணாமலை, சபாநாயகரை விமர்சனம் செய்கிறாரா அல்லது ஆளுநரை விமர்சனம் செய்கிறாரா என்று தெரியாத அளவுக்கு சபாநாயகர் என்று சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் ஆளுநர் என்று பேசி குழப்பதை ஏற்படுத்தினார்.

Kaleel Rahman

நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து பேசிய அண்ணாமலை, சபாநாயகரை விமர்சனம் செய்கிறாரா அல்லது ஆளுநரை விமர்சனம் செய்கிறாரா என்று தெரியாத அளவுக்கு சபாநாயகர் என்று சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் ஆளுநர் என்று பேசி குழப்பதை ஏற்படுத்தினார்.

"நான் ஆளுநர்ட கேக்குறேன், திமுக அரசின் 35 அமைச்சர்கள்ல 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கு. ஆளுநர், அவங்கள்ட இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிக் கொடுக்கட்டும். தமிழகத்தினுடைய எட்டரை லட்சம் கோடி ரூபாய் செய்யப்போறோம்.

பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவி

அதே வார்த்தைய ஆளுநர்ட திருப்பிக் கேக்குறதுக்கு எவ்வளவு நேரமாகும், முதல் குடும்பத்துல இருந்து பணம் வாங்கிக் கொடுங்கன்னு. ஆளுநர் அவர்கள் முறைதவறி நடந்து கொண்டதன் காரணமாக ஆளுநர் அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பதாகதான் நான் பார்க்கிறேன். இன்னைக்கு ஆளுநர் மாத்திப் பேசலாம். ஜன கண மன போட்டா அதுக்கு முன்னாடியே போயிட்டார்ன்னு. ஆளுநர் அவர்களுக்கு எந்த பிஸ்னசும் கிடையாது. கவர்னர் சொல்றதுல தவறு இருக்கா, ரைட் இருக்கா அதை சபையில இருக்கக் கூடிய உறுப்பினர்கள் டிஸ்கஸ் பண்ணட்டும்.

அது அவைக்குறிப்புல போகணுமா வேண்டாமா, உறுப்பினர்கள் டிஸ்கஸ் பண்ணட்டும். ஆளுநர் வந்து ஒரு நியூட்ரல் ஜட்ஜ். அவர் திமுகவுடைய உறுப்பினர் கிடையாது. ஆனா திமுகவுடைய உறுப்பினரை விட மோசமாக ஆளுநர் அவர்கள் நேற்று நடந்து கொண்டார். அதனால்தான் மாண்புமிகு ஆளுநர் அவர்கள், வெளிநடப்பு செய்ய வேண்டி வந்துச்சு” என்று பேசிய அண்ணாமலையிடம், அங்கிருந்தவர்கள் சபாநாயகர் என்று திருத்தியதை அடுத்து, சபாநாயகர் தவறா நடந்துகிட்டதால் தான் ஆளுநர் வெளிநடப்பு செய்ய வேண்டி வந்துச்சு என்றார்.