தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலவாடி ரமேஷ் அறிவிப்பார் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் இருவேறு தீர்ப்பளித்தனர்.
இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில் "சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும். சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாது. சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது" என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.