கடவுளின் அவதாரம் என்று கூறி பாலியல் புகாரில் சிக்கி சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார் சிவசங்கர் பாபா. யார் இந்த சிவசங்கர் பாபா என்பது குறித்து பார்க்கலாம்.
'என்னுடன் அல்ல. கண்ணனுடன் உறவாடுகிறீர்கள்' என பேசும் சிவசங்கர் பாபா, தான் நடத்திவந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களுடனான கலந்துரையாடலில் இப்படி தனது பேச்சை தொடங்குகிறார், சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் இந்த சிவசங்கர் பாபா.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 1949ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியர் சர்மாவின் 6ஆவது மகனாக பிறந்தார் சங்கர் என்கிற சிவசங்கர் பாபா. சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடிந்த அவர் சென்னைக்கு வந்தார். ராயபுரத்தில் லாரி புக்கிங் அலுவலகம், பாரிமுணையில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களில் பணிபுரிந்தார். அதேகாலத்தில் தொலைத்தூர கல்வி மூலம் இளங்கலை, முதுகலை படிப்பையும் முடித்தார். சிறுவயது முதலே ஆன்மிகத்தில் மிகுந்த நட்டம் கொண்டவர். ஜயப்ப பக்தர் என்றும் தன்னை அடையாளம் படுத்திக்கொண்டார். இதனிடையே, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும் அதன்பின்னர் வீட்டை விட்டு வெளியேறி ஆன்மிகத்தில் அதிக ஈர்ப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தங்கத்திலான ஐயப்பன் சிலையை காஞ்சி சங்கராச்சாரியார் மூலம் திருவான்மியூரில் உள்ள தன்னுடை வீட்டில் பிரதிஷ்டை செய்கிறார். இதன் மூலம் அவர் மேலும் பிரபலமானார். ஈஞ்சம்பாக்கம் அருகே உள்ள பாபா கோவிலுக்கு செல்வதை வாடிக்கையாகிக் கொண்ட சிவசங்கர் பாபா, தானும் ஒரு அவதாரம் என்று கூறி அப்போது முதல் தனது பெயரை சிவசங்கர் பாபா என்று மாற்றிக்கொண்டார். பின்னர் அங்கேயே சிறு குடில் அமைத்து பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினார்.
இதனால் புகழ், வருமானம் கிட்டியதும் கேளம்பாக்கம் அருகே நடிகர் ரஜினிகாந்த் பண்ணை வீட்டிற்கு பின்புறம் 65 ஏக்கரில் பிரமாண்டமான ஆசிரமம் கட்டுகிறார். அது ஏரி புறம்போக்கு நிலத்தில் கட்டியதாக புகார் உள்ளது. தன்னுடைய பக்தர்களுக்கு இந்த ஆசிரமத்திலேயே வீடும் கட்டி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். பின்னாளில் சர்வதேச உறைவிட பள்ளி என வளர்ச்சி பெற்றார். இதனால் நாளுக்கு நாள் இவருக்கு பக்தர்கள் அதிகமாயினர். 'நீங்கள் என்னுடன் உறவாடவில்லை பகவான் கண்ணனுடன் உறவாடுகிறீர்கள்' என்று கூறி வசியப்படுத்தியதாக பெண்கள் புகார் கூறுகின்றனர். உடை விஷயத்தில் தாராளம் காட்டும் சிவ சங்கர் பாபாவின் டீ சர்ட் புகைப்படமே அவரின் திருவிளையாடலின் சாட்சிகளாக இருக்கிறது.