தமிழ்நாடு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் யார்? - 5 ஆம் தேதி ஆலோசனை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் யார்? - 5 ஆம் தேதி ஆலோசனை

webteam

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியிலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் சென்னை வர உள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவின் ஆளுநராக பதவியேற்று கொண்டார். அதனை அடுத்து, 4 மாதங்களாக அக்கட்சியின் தலைவர் பதவி காலியாகவே இருந்து வருகிறது‌. அடுத்த தலைவராக யார் வருவார் என்பது குறித்து அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விரைவில் அப்பதவிக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைமை சில மாதங்களாகவே ஆ‌லோசித்து வருகிறது. இது தொடர்பாகப் பேச டெல்லியில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் வருகிற 5ஆம் தேதி சென்னை வர இருக்கிறார். அன்றைய தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளை கட்சியின் மேலிடத்துக்கு ஜெயப்பிரகாஷ் தெரிவிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவரை‌ மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.