தமிழ்நாடு

ஆழ்துளைக் கிணறுகள் குறித்த புகாருக்கு ‘விசில் ரிப்போர்ட்டர்’ மொபைல் ஆப்..!

ஆழ்துளைக் கிணறுகள் குறித்த புகாருக்கு ‘விசில் ரிப்போர்ட்டர்’ மொபைல் ஆப்..!

subramani

திருச்சி மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப் பட்டியில் கவனிப்பின்றி கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து அரசும் சமூக செயல்பாட்டாளர்களும் இப்படியான விபத்துகள் தொடராமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

24 மணி நேரத்திற்குள் பயன்படாமல் கிடக்கும் ஆழ்துளைக்கிணறுகளை மழைநீர் சேகரிப்பு நிலைகளாக மாற்ற அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு, இப்படியான அபாய நிலையிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிய விசில் ரிப்போர்ட்டர் என்ற செயலியை உருவாக்கியுள்ளது.

இந்த செயலியை உங்கள் மொபைல் ப்ளே ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களது விவரங்களை கொடுத்து லாகின் செய்து கொண்டு., உங்களுக்கு தெரியவரும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு பற்றிய விவரங்களை இதன் மூலம் தெரியப்படுத்தலாம்.

பயன்படாத கிணற்றின் அருகில் நின்று கொண்டு, செயலியின் வலதுபுறமாக கீழே இருக்கும் பச்சை நிற பொத்தானை அழுத்தினால் தகவல் சென்றுவிடும். பிறகு உங்களது லொகேசனை கண்டுபிடித்து  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் அந்த ஆழ்துளைக் கிணறுகள் உடனடியாக மூடப்படும். இந்த செயலி பற்றிய விவரங்களை அமைச்சர் விஜய பாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.