பாலசந்திரன்
பாலசந்திரன் pt web
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் மேலும் தீவிரமடையும்..கரையைக் கடக்கும் போது எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்?

Angeshwar G

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பால், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளின் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியான தையூர் ஏரி நிரம்பியுள்ளது.

மிக்ஜாம் புயலால் இன்று மாலை முதல் திங்கட்கிழமை மாலை வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கனமழையின் போது பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் சென்னைக்கு தென்கிழக்கே 250 கிமீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும் போது 110 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய தலைமுறையிடம், வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் பிரத்யேகமாக சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். வரைப்படத்துடன் புயலின் நடமாட்டத்தை அவர் விளக்கியதை காணொளியில் காணலாம்.