தமிழ்நாடு

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்: கடிதம் எழுதிய மாணவியுடன் தொலைபேசியில் உரையாடிய முதல்வர்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்: கடிதம் எழுதிய மாணவியுடன் தொலைபேசியில் உரையாடிய முதல்வர்

kaleelrahman

பள்ளிகள் திறப்பு குறித்து கடிதம் எழுதிய கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த ரவிராஜன் என்பவரது மகள்கள் பிரஜ்னா மற்றும் ரேஷிதா ஆகிய இருவரும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் கடிதத்தை படித்த முதல்வர் தொலைபேசி வாயிலாக பிரஜ்னாவை அழைத்து பேசியுள்ளார். முதலமைச்சருடன் உரையாடியது மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என மாணவி பிரஜ்னா கூறினார்