தமிழ்நாடு

வாட்ஸ் அப் விதிகள், கொள்கைகளில் மாற்றம்

வாட்ஸ் அப் விதிகள், கொள்கைகளில் மாற்றம்

webteam

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் தனது விதிமுறைகளிலும், கொள்கைகளிலும் திருத்தம் செய்துள்ளது.

வாட்ஸ் அப்பின் பணப்பட்டுவாடா சேவை இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக தொடங்க உள்ள நிலையில், அதற்கான விதிமுறைகள் மற்றும் கொள்கைகளிலும் மாற்றம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களது பணப்பட்டுவாடா சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களை பற்றி கூடுதல் தகவல்களை தர வேண்டியிருக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக தனது 10 லட்சம் வாடிக்கையாளர்களிடம் பணப்பட்டுவாடா சேவையை சோதனை ரீதியில் செயல்படுத்தி வருகிறது. 

வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்புவது எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாக அதை பயன்படுத்தி வருபவர்கள் தெரிவிப்பதாக வாட்ஸ் அப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம், பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பட்டுவாடா சேவையை வாட்ஸ் அப் வழங்க உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக வாட்ஸ் அப்பின் பணப்பட்டுவாடா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.