மின்சாரம்
மின்சாரம் PT
தமிழ்நாடு

ஏன் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுகிறது.. நமக்கு வேண்டிய மின் உற்பத்தியும், தேவையும் என்ன?

Jayashree A

தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடை புகார் குறித்தும், அதற்கான காரணம் என்ன? மாநிலத்தில் மொத்த மின் உற்பத்தி எவ்வளவு? மின்சார தேவை எவ்வளவு தேவைப்படுகிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்

தமிழகத்தின் மொத்த மின் நிறுவு திறன் 19,308 மெகாவாட். இதில் அனல் மின் நிலையங்கள் மூலம் 2,712 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சூரிய மின் சக்தி மூலம் 2398 மெகாவாட் மின்சாரமும் காற்றாலைகள் மூலம் 400 மெகாவாட்டும், நீர் மின் நிலையங்கள் மூலம் 363 மெகாவாட் மின்சாரமானது உற்பத்தி செய்யப்படுகிறது. இதை தவிர மத்திய தொகுப்பில் இருந்து 9801 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

இதில் தமிழகத்தில் மின் தேவையானது பகலில் 17000 மெகாவாட்டும் இரவில் 18000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

இதில் சென்னையில் மட்டும் 4000 மெகாவாட் மின்சார தேவை உள்ளது. இதை தவிர, கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஒன்றரை லட்சம் மின் இணப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாலும், தொழில் நிறுவனங்களில் உற்பத்தி அதிகரித்திருப்பதாலும் மின்சார தேவை உயர்ந்து வருவதாகக்கூறப்படுகறது. இதை தவிர தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அதிக் அளவிலான மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் மின் மாற்றிகளில் பிரச்சனை ஏற்படுவதே மின்வெட்டுக்கு காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே மின் விநியோகத்தில் இருக்கும் சிக்கல்களை விரைந்து களைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.