தமிழ்நாடு

எதற்கெல்லாம் தடை தொடரும்?: அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு

webteam

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எதற்கெல்லாம் தடை தொடரும் என்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய தடை நீடிக்கிறது.

அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை தொடர்கிறது.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல தடை தொடர்கிறது. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல்கள் சேவைக்கு தடை தொடரும். வணிக வளாகங்களுக்கு தடை தொடரும். பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை. எனினும் இந்நிறுவனங்கள் இணையவழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன் அதனை ஊக்குவிக்கலாம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை.

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல்குளங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியங்கள், போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு தடை.

அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு , பொழுதுபோக்கு, கலாசாரா நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை தொடரும்.

மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.