விஜய் Pt web
தமிழ்நாடு

விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் எவ்வளவு வாக்குப்பதிவு..? கடந்த தேர்தல்களின் சதவிகிதம் என்ன?

விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 89.73 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் எவ்வளவு வாக்குகள் பதிவாகின. அதில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்.

PT WEB

பெரம்பூர் தொகுதியில் இந்த முறை 89.73 சதவீதம் என்ற சாதனை வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. 2011ல் 69.7 சதவீத வாக்குகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி, 2016ல் 64.95 சதவீத வாக்குகளுடன் அதிமுக, 2021ல் 62.96 சதவீத வாக்குகளுடன் திமுக வென்றிருந்த நிலையில், இப்போது விஜய் போட்டியிடும் சூழலில் உயர்ந்த வாக்கு சதவீதம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் முதல் முறையாக அரசியல் களம் கண்டுள்ளார். 233 தொகுதிகளிலும் வேட்பாளர்களை விஜய் நிறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு டிவி சின்னத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் களமிறங்கியுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. சென்னையில் திமுக வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கியுள்ளார். இதனால், இந்த தொகுதியில் எவ்வளவு வாக்குகள் அவருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தவெக தலைவர் விஜய்

கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. சென்னையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சென்னையிலும் கடந்த 2021-ல் வாக்கு சதவீதம் 63.06 இருந்த நிலையில், இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் தற்போதைய நிலவரப்படி 81.74 ஆக உயர்ந்துள்ளது.

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 89.73 வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் எவ்வளவு வாக்குகள் பதிவாகின. அதில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்ற விவரங்களை பார்க்கலாம்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் 69.7 சதவீத வாக்குகள் விழுந்தது. இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

2016 சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 64.95 சதவீத வாக்குகள் பதிவானது. அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடம் பெற்ற திமுக வேட்பாளர் என். ஆர். தனபாலன் 79,455 வாக்குகள் பெற்றார்.

2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 62.96 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், திமுக சார்பாக போட்டியிட்ட ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றார். ஆர்.டி சேகர் சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.