Rajesh Lakhani pt desk
தமிழ்நாடு

அமித்ஷா வருகையின் போது மின்சாரம் தடைபட காரணம் இதுதான்! மின்சார வாரியம் விளக்கம்

நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷர் சென்னைக்கு வருகை தந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

webteam

இதையடுத்து மின்சாரம் தடைபட்டதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், மின்சார வாரியத்தின் மீது நம்பிக்கை உள்ளது எனவே வருங்காலங்களில் இதுபோன்று நடக்கக் கூடாது என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.

amitsha

இந்நிலையில், தமிழக மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி புதிய தலைமுறையிடம் விளக்கமளித்துள்ளார். அதில், சென்னை போரூர் துணை மின் நிலைய உயர்மின் அழுத்த பாதையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதே மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின் வினியோகம் தடைபட காரணம் என தெரிவித்தார்.