புலி
புலி புதிய தலைமுறை
தமிழ்நாடு

நஞ்சு வைத்து கொலை செய்யும் அவலம்; மனிதர்களால் புலிகள் கொல்லப்படுவதன் பின்னணி என்ன?

PT WEB

மேற்குத் தொடர்ச்சி மலை, புலிகளின் தாய் நிலமாக பார்க்கப்படுகிறது. இதனால், புலிகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக இடம்பெயர்வதால் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

2018ல் இங்கு புலிகளின் எண்ணிக்கை 80 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 124 ஆக உயர்ந்துள்ளது. இதுஒருபுறம் இருந்தாலும், வனத்தையொட்டிய தனியார் காட்டேஜ்கள், விளைநிலங்கள் உள்ள பகுதிகளுக்கு வரும் புலிகள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் 2 புலிகள் நஞ்சு வைத்து கொல்லப்பட்டன. நீலகிரியில் கடந்த இருவாரங்களில் 6 புலிகள் இறந்திருக்கின்றன. புலிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பதோடு, இதுபற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும்போது காலம் தாழ்த்தாது உடனடி நடவடிக்கை எடுத்தால், மனிதர்களிடம் சிக்கி புலிகள் இறப்பதை குறைக்கலாம் என்கிறார்கள் வனச் செயற்பாட்டாளர்கள்.