தமிழ்நாடு

தமிழகத் தேர்தல் முடிவுகளின் முதற்கட்ட நிலவரம் சொல்வதென்ன?

தமிழகத் தேர்தல் முடிவுகளின் முதற்கட்ட நிலவரம் சொல்வதென்ன?

kaleelrahman

சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளின் முதற்கட்ட நிலவரம் சொல்வதென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 75 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை 234 தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவிக்க இருக்கிறார்கள். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ளது.

இதோடு கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழகத்தில் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரியவரும்.