தமிழ்நாடு

எதெற்கெல்லாம் தடை தொடரும்? தமிழக அரசின் அறிவிப்பு சொல்வதென்ன?

எதெற்கெல்லாம் தடை தொடரும்? தமிழக அரசின் அறிவிப்பு சொல்வதென்ன?

webteam

செப்டம்பர் மாதத்திற்கு சில தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்க அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ஏற்கனவே இருந்து மீண்டும் தொடரும் தடைகள்:

1. பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை. எனினும் இணையவழிக்கல்வி கற்றல் தொடர்வதுடன் அதனை ஊக்குவிக்கலாம்.
2.திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
3. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர சர்வதேச விமானபோக்குவரத்துக்கு தடை.
4. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து
5. மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிறக்கூட்டங்கள், மற்றும் ஊர்வலங்களுக்கு தடை.