தமிழ்நாடு

புதிய நடவடிக்கைகள் என்னென்ன? ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் முதல்வர் அறிவிப்பு

புதிய நடவடிக்கைகள் என்னென்ன? ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் முதல்வர் அறிவிப்பு

webteam

கொரோனா பரவலைத் தடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி இன்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் சென்னை மாநில ஆணையர் ஆகியோருடன்  ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் வரும் காலங்களில் கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில் உள்ளவை:-

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

சேலம், மதுரை, திருப்பூர், கோவை மாநகராட்சிகளில் 6 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.

Containment Zone-ல் உள்ள வீடுகளில் மாஸ்க், சானிடைசர், 250 கிராம் கிருமி நாசினி படவுர்
வழங்கப்படும்.

வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்படும்.

தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.

நோய் தொற்று பகுதிகளில் ஒரு நாளைக்கு இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவரவர் இடங்களுக்குச் சென்று உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் சூரணம் வழங்குவது உறுதி செய்யப்படும்.

சென்னையில் கொரோனா பரிசோதனை வாகனங்கள் 3ல் இருந்து 10ஆக அதிகரிக்கப்படும்.

பொதுக் கழிவறைகள் தினந்தோறும் 3 முறை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கப்படும்.

ஏழைகள் தனிமைப்படுத்திக்கொள்ள வசதியில்லை எனில் அரசின் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.