தமிழ்நாடு

சசிகலாவுக்கான பரோல் நிபந்தனைகள் என்ன ?

சசிகலாவுக்கான பரோல் நிபந்தனைகள் என்ன ?

பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின், இரண்டாவது முறையாக பரோலில் வந்திருக்கிறார் சசிகலா. தனது கணவர் நடராஜன் உயிரிழந்ததை அடுத்து 15 நாள் பரோலுக்கு விண்ணப்பித்த அவருக்கு , மனிதாபிமான அடிப்படையில் அவசர பரோல் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை விதிக்கப்பட்டது போல,சில கடுமையான நிபந்தனைகளை சிறைத்துறை இம்முறையும் விதித்துள்ளது. அதில், சசிகலா தஞ்சாவூரைத் தவிர வேறு எங்கும் , எந்த காரணத்திற்காகவும் செல்லக் கூடாது என்பது முதல் நிபந்தனை. இதனால் சசிகலா சென்னைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்து, அரசியல் சார்ந்த கூட்டங்களில் அல்லது சந்திப்புகளில் கலந்து கொள்ளக் கூடாது ; அரசியல்வாதிகளை அரசியல் ரீதியாக சந்திக்க கூடாது. இவற்றோடு எந்த ஒரு ஊடகத்துக்கும் பேட்டி அளிக்க கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 3ம் தேதி வரை பரோல் வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஏப்ரல் 4-ம் தேதி காலை பரப்பன சிறைக்கு சென்றால் போதுமானது.