தமிழ்நாடு

2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

webteam

தமிழகம், கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகம் (மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி), கேரளா, கடலோர கர்நாடகாவில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடித்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகச் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் தற்போது வலுப்பெற்று, சட்டிஸ்கர், ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே கடல்பகுதியில் நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வுப் பகுதி மாறும் என எதிபார்க்கபடுகிறது. 

மேற்கிலிருந்து வரும்‌ ஈரப்பதமான காற்றால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வால்பாறை மற்றும் நீலகிரி ஆகிய இடங்களில் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமானது மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வரும் 19ம் தேதி முதல் தென் மாநிலங்களில் மழை படிப்படியாக குறையும் எனவும் அறிவித்துள்ளது.