தமிழ்நாடு

கிணறு குளங்களை காணவில்லை: நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

கிணறு குளங்களை காணவில்லை: நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Rasus

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு, குளங்களை காணவில்லை என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி ராவுத்தர்கேனி உள்ளிட்ட பல நீர்நிலைகளை காணவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 27 நீர்லைகளை எங்கே என நீதிபதி கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் ஆட்சியர் வரும் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டனர்.