தமிழ்நாடு

சிலம்ப கலைக்கு அங்கீகாரம்: சிலம்பம் சுற்றி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கலைஞர்கள்

சிலம்ப கலைக்கு அங்கீகாரம்: சிலம்பம் சுற்றி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கலைஞர்கள்

JustinDurai
சிலம்பக் கலைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை வரவேற்கும் விதமாக, நாமக்கல்லில் உள்ள சிலம்ப கலைஞர்கள் சிலம்பம் சுற்றி தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிலம்பக் கலைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை வரவேற்கும் விதமாக, நாமக்கல்லில் உள்ள சிலம்ப கலைஞர்கள் சிலம்பம் சுற்றி தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
பாரதமாதா சிலம்பக்கலை சங்கத்தின் சார்பாக நாமக்கல் பூங்கா சாலையில் சிலம்பக்கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், சிலம்பம் சுற்றி தங்களின் திறமைகளை வெளிபடுத்தினர்.