தமிழ்நாடு

'அதிமுகவின் ஒற்றை தலைமையேற்க வருக வருக': மதுரையில் ஒட்டியுள்ள சசிகலா ஆதரவு போஸ்டர்

'அதிமுகவின் ஒற்றை தலைமையேற்க வருக வருக': மதுரையில் ஒட்டியுள்ள சசிகலா ஆதரவு போஸ்டர்

kaleelrahman

மதுரை மாவட்டம் முழுவதும் சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக புறநகர் மாவட்ட கிழக்கு மகளிர் அணி துணைச் செயலாளர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவை வழிநடத்த சசிகலாவை வேண்டுகோள் விடுக்கும் வகையில் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ. அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் ' ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா' என்ற வாசகத்துடன் மதுரை திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், அண்ணாநகர், செல்லூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் சுவரொட்டி ஒட்டியதைத் தொடர்ந்து இன்று மீண்டும் அதிமுக மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் நிர்வாகிகளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.