தமிழ்நாடு

நெல் விற்பனையை எளிதாக்க இணையதள வசதி அறிமுகம்!

நெல் விற்பனையை எளிதாக்க இணையதள வசதி அறிமுகம்!

கலிலுல்லா

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக, இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், சர்வே எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் இணையத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. WWW.TNCSC.TN.GOV.IN மற்றும் WWW.TNCSC-EDPC.IN ஆகிய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன், விவசாயிகளின் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

இணைய வழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படவுள்ளது. குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை விற்பனை செய்யலாம் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் குறிப்பிட்டுள்ளது.