புயலால் பெய்த கனமழையால் திருவண்னாமலை ஆரணியில் கைத்தறி பட்டு நெசவாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள வாழைப்பந்தல் (இது ஆரணி மாவட்ட எல்லையில் இருக்கிறது) உள்ளிட்டகிராமங்களைச் சுற்றிலும் நீர் தேங்கியதுடன், அப்பகுதியில் இருக்கும் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் இருக்கும் நெசவாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதுடன், அவர்களின் தொழிலும் பாதிப்படைந்துள்ளது. மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு அரசு உரிய நிவாரணம் கொடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் பருவமழை காலங்களில் தங்களுக்கு இப்படியான நெருக்கடிகள் வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலதிக விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!