தமிழ்நாடு

"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்" - வானிலை மையம்

"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்" - வானிலை மையம்

webteam

வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு சற்று குறைந்திருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ‌மழையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு மழை சற்று குறைவாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

அதிகப்பட்சமாக ஒகேனக்கலில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. விழும்புரம் மாவட்டம் குப்பனாம்பட்டியில் 7 சென்டி மீட்டரும் மதுரை உசிலம்பட்டியில் 5 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதி மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.