சென்னையில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் ஆங்காங்கே விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுவை ஆகிய 8 மாவட்டஙகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களின் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளையை பொருத்தவரை, நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.