மழை கோப்புப்படம்
தமிழ்நாடு

வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. எங்கு மழைக்கு வாய்ப்பு?

வடதமிழகத்தை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் வலுவிலக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அங்கேஷ்வர்

வடதமிழகத்தை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் வலுவிலக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

அதேசமயத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 30 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.