தமிழ்நாடு

”உங்க கல்வி கட்டணத்த நாங்க செலுத்துறோம்” - மாணவர்களின் கட்டணத்தை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள்

webteam

மதுரையில் உள்ள திருமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் 2020 -21 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை அப்பள்ளி ஆசிரியர்களே ஏற்றுள்ளனர்.

கொரோனா பரவலால் கடந்த நான்கு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து அண்மையில் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர்களை சேர்ப்பதற்கான அனுமதி அளித்தது. இதனால் தற்போது அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் மதுரை திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு 2020 - 21 ஆம் ஆண்டுக்கான மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அவர்களே செலுத்துவது என கடந்த சுதந்திரத் தினத்தன்று முடிவெடுத்தனர்.

அந்த வகையில் பள்ளியில் சேரும் மாணவர்களின் 2020 -21 ஆண்டுக்கான மாணவர்களின் சேர்க்கை கட்டணம் மற்றும் பிறக்கல்வி செலவுகள் உள்பட எந்த கட்டணமும் செலுத்தாமல் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம் என ஆசியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்பள்ளியானது பன்னிரெண்டாம் வகுப்பு 94 சதவீத மாணவர்களையும், பதினொன்றாம் வகுப்பு 97 சதவீத மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்துள்ளது.