தமிழ்நாடு

போராட்டத்தை வாபஸ் பெற்றதால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

போராட்டத்தை வாபஸ் பெற்றதால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

webteam

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான பணி முறிவு நடவடிக்கையை திரும்ப பெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஊதியம் மற்றும் பதவி உயர்வு, பணியிடங்களை குறைக்க கூடாது, மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒருவாரத்திற்கும் மேலாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிடில் பணிமுறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக‌ திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பணி முறிவு நடவடிக்கை திரும்ப பெறப்படுகிறது என்றும், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.