தமிழ்நாடு

குடும்ப ஆட்சி வராமல் தடுப்போம்: மாஃபா பாண்டியராஜன்

குடும்ப ஆட்சி வராமல் தடுப்போம்: மாஃபா பாண்டியராஜன்

webteam

தமிழகத்தில் குடும்ப ஆட்சி வராமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுப்போம் என பன்னீர்செல்வம் ஆதரவாளரான அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்கு சென்ற நிலையில் அவரின் அக்கா மகன் டிடிவி தினகரன் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று புதிய முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.

இந்நிலையில், பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாஃபா பாண்டியராஜன், அதிமுக தொண்டர்கள் பன்னீர்செல்வம் பின்னால் இருக்கிறார்கள். தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது சட்டப்படி செல்லாது என கூறினார். மேலும், சசிகலா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறினார்.