தமிழ்நாடு

“சென்னையில் 15 நாட்கள் கடைகளை அடைக்கத் தயார்” - வணிகர்கள் சங்கம்

“சென்னையில் 15 நாட்கள் கடைகளை அடைக்கத் தயார்” - வணிகர்கள் சங்கம்

webteam

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 நாட்கள் கடைகளை அடைக்கத் தயார் என வணிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் நாள்தோறும் 1000ஐ கடந்து கொரோனா பாதிப்பு உயர்ந்துகொண்டிருக்கிறது. இதுவரை 25,937 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,507 சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 12,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர சென்னை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இதனால் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் உள்ளதா ? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் சென்னையில் மீண்டும் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 15 நாட்கள் கடைகளை அடைக்கத் தயார் என வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். அரசு உத்தரவிட்டால் கடைகள் அடைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழக அரசின் நிதித்துறை செயலாளரிடம் நேரில் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.