தமிழ்நாடு

“கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை” - மு.க.ஸ்டாலின்

“கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை” - மு.க.ஸ்டாலின்

EllusamyKarthik

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். “ எங்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் செய்த சதி இது. மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பினால் அதை வழங்குவது எங்கள் கடமை” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அண்ணா தலைமையில் நடந்த தேர்தலின்போது சில கூட்டணி கட்சிகள் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்