தமிழ்நாடு

"வெளிமாநில தமிழர்களிடையே தமிழ் பயன்பாட்டை பரவலாக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்

"வெளிமாநில தமிழர்களிடையே தமிழ் பயன்பாட்டை பரவலாக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்

PT WEB

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஆய்வு கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வாழும் தமிழர்களிடையே தமிழ்ப் பயன்பாட்டை பரவலாக்கும் வகையில் புதிய முயற்சிகளை, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.