தமிழ்நாடு

' தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல் என்பதை உணர்கிறோம் ' - ரிசர்வ் வங்கி விளக்கம்

Veeramani

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் என்பதை உணர்கிறோம் என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஜனவரி 26, 2022 குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்தில் நடந்த விழாவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றும் எதிர்பாராத மற்றும் வருந்தத்தக்க சில தேவையற்ற கூற்றுகள் எழுப்பப்பட்டன.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள், நடைமுறைகளை மதிக்கிறோம் , தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் என்பதை உணர்கிறோம். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து எங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக, நேற்று சென்னை ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்தில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.