நாம் தமிழர் கட்சியில் இணையவில்லை என்று நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி நாம் தமிழர் கட்சியில் இணைந்ததாக ஒரு வீடியோ பதிவு அக்கட்சியை சேர்ந்தவர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ பதிவு உண்மையில்லை என்று விளக்கமளித்துள்ளார் கஸ்தூரி. தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ காட்சியின் புகைப்படத்தை பதிவிட்டு இப்படி பொய் எழுதி சர்ச்சை செய்து பிழைப்பதைவிட வேறு வேலை பார்க்கலாம். இந்த வீடியோவிலுள்ள என் பேச்சு ஒரு கருத்தரங்கத்தில் பேசியது. கட்சி கூட்டத்தில் பேசியதல்ல என்று கூறியுள்ளார் கஸ்தூரி.