தமிழ்நாடு

ஆவின் முறைகேடு: தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் - அமைச்சர் நாசர்

ஆவின் முறைகேடு: தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் - அமைச்சர் நாசர்

kaleelrahman

ஆவின் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

ஆவின் நிர்வாகத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு நிலுவையில் உள்ள பணம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர், ஆவின் பொருட்களை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று கூறினார்.