சிலைக்கடத்தலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய அவர்கள், சிலைக் கடத்தலில் தாங்கள் ஈடுபட்டதாக வெளியான தகவல் பொய்யானது என தெரிவித்தனர். பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலலையில், தங்களுக்கு எதிராக பொய் பரப்புரை செய்கின்றனர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். செய்தியால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
முன்னதாக சிலைக்கடத்தல் விவகாரத்தில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக உயர்நீதிமன்றத்தில், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.