தமிழ்நாடு

நாங்களும் பாஜகவை விமர்சிக்கத்தான் செய்கிறோம் - தம்பிதுரை

நாங்களும் பாஜகவை விமர்சிக்கத்தான் செய்கிறோம் - தம்பிதுரை

webteam

மத்திய அரசுடன் தமிழக அரசு நட்புடன்தான் உள்ளது.  ஆனால் கட்சி என்று வரும்போது, பாஜக. அதிமுகவை விமர்சிக்கும்போது,  நாங்களும். பாஜகவை விமர்சிக்கிறோம் என்ற தம்பிதுரை,  கூட்டணிக்காக யார் கதவையை தட்டவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். 

 பின்னர் துணை சபாநாயர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் “தனிப்பட்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ள கருத்து மீது உயர்நீதிமன்ற தனது பார்வையைக் கொண்டுவந்துள்ளது.  மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஹெச். ராஜா கூறிய கருத்து ஏற்றுக் கொள்ளமுடியாதது. கண்டிக்கத்தக்கது.  சட்ட சிக்கல் உள்ளதால் உடனடியாக கைது செய்ய முடியாது என்றார்.

மேலும் ”மத்திய அரசு கையில்தான் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் அதிகாரம் உள்ளது. மாநில அரசின் வாட் வரியை குறைப்பதால் எந்த பலனும் கிடைக்காது.  குருடாயில் விலை குறைவாக உள்ளது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. மத்திய அரசு செஸ் என்ற வரி மூலம் எல்லா பணத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. மாநில சுயாட்சி, மாநில அதிகாரங்கள் பறிக்கப்படுகிறது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மாநில உரிமைகளை பறிக்கிறது.  பாஜக மட்டுமல்ல,  காங்கிரஸ் அரசும் இதையேதான் செய்தது” என தம்பிதுரை கூறினார்

தொடர்ந்து பேசிய அவர் “18 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக இப்போது, மக்களவை தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் அங்கும் வகிப்பது திமுகவின் கனவாக உள்ளது.  அரசியல் வேறு,  அரசு வேறு.  மாநில அரசு மத்திய அரசுடன் நட்புடன்தான் உள்ளது.  அதனால்தான் 1300 கோடி ஊரக வளர்ச்சிக்காக தற்போது வழங்கியுள்ளது.  அதனால்தான் மத்திய அரசுடன் எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிப்பதில்லை. ஆனால், கட்சி என்று வரும்போது,  பாஜகவுடன் வேறுபடுகிறோம்.  பாஜக அதிமுகவை விமர்சனம் செய்கிறது.  அதிமுகவும் பாஜகவை விமர்சனம் செய்கிறோம்.  பாஜக எங்களை விமர்சிக்கும்போது அமைதியாக இருக்க வேண்டும் என யாரும் எங்களை கட்டுப்படுத்த முடியாது” என்றார்.

அதிமுக பாஜக கூட்டணிக்காக கதவு திறந்துள்ளாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, ஜெயலலிதா காட்டிய வழியில் அதிமுக செயல்படும் 2014 தேர்தலில் மக்களவைத் தேர்தலில் தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றது.  தனித்து நின்று வெற்றி பெறும் திறமை அதிமுகவுக்கு உள்ளது. கூட்டணிக்கு யார் கதவையும் தட்டவில்லை.  இன்றைய நிலையில் தனித்து நின்று வெற்றி பெறும் வல்லமை அதிமுகவுக்கு உள்ளது.  தேர்தல் நேரத்தில் நடப்பது வேறு என்றார்.